காஞ்சீபுரம், மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

காஞ்சீபுரம், மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காஞ்சீபுரம், மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் படப்பையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வேளாண் உற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவு சங்க தலைவருமான எழிச்சூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் படப்பை அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் மாரி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் குமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜாமாணிக்கம், ஆத்தனஞ்சேரி செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதனைதொடர்ந்து குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க. கொடியை ஒன்றிய செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரன் ஏற்றிவைத்தார். இதில் கிளை செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒரத்தூர் ஊராட்சி அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவுக்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளரும், படப்பை, மணிமங்கலம் வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனருமான என்.டி.சுந்தர் தலைமை தாங்கி ஒரத்தூர், மேட்டுகாலனி, பெரியகாலனி, கீழக்கழனி, நீலமங்கலம், அம்மணம்பாக்கம், வரதராஜபுரம், கண்டர்பாளையம், உள்பட 10 இடங்களில் கட்சி கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதில் ஓரத்தூர் முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் சுந்தர், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பாசறை தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ், கிளை செயலாளர்கள், இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் நடந்த பிறந்த நாள் விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.சல்குரு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் கே.ஆறுமுகம், மரகதம் குமரவேல் எம்.பி. ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா ஆகியோர் கலந்துகொண்டு 500 பேருக்கு சிற்றுண்டியும், 200 பள்ளி மாணவ- மாணவிகருக்கு பள்ளி உபகரணங்களும், பாரதபுரம் கிராமத்தில் தொழுநோயாளிகளுக்கு அன்னதானமும் வழங்கினார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் சார்பில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் வடகால் மாரி ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சந்தானகிருஷ்ணன், கே.வி.என். பன்னீர் முன்னிலை வகித்தனர்.

அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு கவுஸ்பாஷா உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் 500 பெண்களுக்கு இலவச சேலைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இது போல திருத்தேரி, பாரேரி, விஞ்சியம், பாக்கம் கிளை சார்பில் நடந்த விழாவில் கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வீராபுரம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சரவணன், செட்டிபுண்ணியம் ஊராட்சியில் அமுதா குணசேகரன் தலைமையில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் போந்தூர் ஊராட்சியில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட வேளாண் விற்பனையாளர் சங்க துணைத்தலைவர் போந்தூர் சேட்டு தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை, எளிய மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.

எடையார்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எடையார்பாக்கம் மூர்த்தி ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஊராட்சி செயலாளர் தேவராஜன், கிளை அ.தி.மு.க. செயலாளர்கள் காமராஜ், சுப்புரமணி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் வாலாஜாபாத் பஸ் நிலையம், கருக்குப்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாவட்ட பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார், ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜன், பேரூராட்சி செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் என்.ஆர்.பழனி, ரவி, உள்ளாவூர் லோகநாதன் வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம், திருப்புலிவனத்தில் அ.தி.மு.க. ஒன்றியச்செயலாளர் பிரகாஷ்பாபு தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது. நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதேபோன்று உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் நகர இளைஞரணி பொருளாளர் துரைபாபு தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, நுற்றுக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் உத்திரமேரூர் முன்னாள் தொகுதி செயலாளர் தர்மன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எம்.கே.பி. வேலு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கபஞ்சாசரம், மாவட்ட இளைஞரணி பொருளாளர் ஜெயவிஷ்ணு, திருவந்தவார் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com