கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

கார்த்திக திபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா முக்கிய விழாவாகும்.

விழாவின் 10-ம் நாள் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற நவம்பர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் விழா விமரிசையாக நடைபெறும். 10-ம் நாள் விழாவான நவம்பர் மாதம் 19-ந் தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இந்த விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் தொடங்கியது.

கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் பந்தக்காலுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பிச்சகர் பந்தக்காலை கோவில் ராஜகோபுரம் வரை சுமந்து வந்தார்.

அதைத் தொடர்ந்து கோவில் முன்பு தேரடி வீதியில் நிறுத்தப்பட்டுஉள்ள விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய 5 பஞ்சமூர்த்திகளின் தேர்களுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.

பின்னர் காலை 5.30 மணி அளவில் ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கல வாத்தியங்களுடன் பந்தக்காலிற்கு தீபாராதனை காண்பித்து பந்தக்கால் நடப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

இதில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், தி.மு.க., அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை யாட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com