கொடைக்கானல் தீம் பார்க்கில் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து 2 சுற்றுலா பயணிகள் காயம்

கொடைக்கானல் தீம் பார்க்கில் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து 2 சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.
கொடைக்கானல் தீம் பார்க்கில் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து 2 சுற்றுலா பயணிகள் காயம்
Published on

கொடைக்கானல்,

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நண்பர்கள் 15 பேர் கொடைக்கானலுக்கு நேற்று காலை சுற்றுலா வந்தனர். அங்கு அவர்கள் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள தனியார் தீம் பார்க்கில் கட்டணம் செலுத்தி உள்ளே சென்று ராட்டினம் ஆடினர். அப்போது சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (வயது 25), வியாசர்பாடியை சேர்ந்த ஜெகதீஷ் (24) ஆகிய இருவரும் ராட்டினத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் கொடைக்கானல் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதனிடையே சுற்றுலா வந்தவர்களுக்கும், தீம் பார்க்கில் வேலை பார்ப்பவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதை அருகில் இருந்தவர்கள் தடுத்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அப்சர்வேட்டரி பகுதியில் இயங்கி வரும் தனியார் தீம் பார்க்கில் உரிய பாதுகாப்பு வசதிகளை நிர்வாகத்தினர் ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com