பலத்த மழை பெய்து வருவதால் உஷார் நிலையில் இருக்கும்படி 5 மாவட்ட கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவு

பலத்த மழை பெய்து வருவதால் உஷார் நிலையில் இருக்கும்படி 5 மாவட்ட கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
பலத்த மழை பெய்து வருவதால் உஷார் நிலையில் இருக்கும்படி 5 மாவட்ட கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக சிவமொக்கா, குடகு, தட்சிண கன்னடா, சிக்கமகளூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பி வழிகின்றன. அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு பேசினார். மழை பாதிப்பு குறித்து அவர் விவரங்களை கேட்டு அறிந்தார். பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அந்த மாவட்ட கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவிட்டார்.

மேலும் உஷார் நிலையில் இருக்கும்படியும் அறிவுறுத்தினார். குறித்த நேரத்தில் நிவாரண பணிகளை செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும்படி மாவட்ட பொறுப்பு செயலாளர்களுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பொறுப்பு மந்திரிகளும் சுற்றுப்பயணம் செய்து நிலைமையை ஆய்வு செய்யுமாறு முதல்-மந்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com