21 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறியவர், பெற்றோரிடம் ஒப்படைப்பு

21 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறியவர், பெற்றோரிடம் ஒப்படைத்தது உதவும் கரங்கள் அமைப்பு.
21 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறியவர், பெற்றோரிடம் ஒப்படைப்பு
Published on

சென்னை அம்பத்தூர் பஸ் நிலையம் அருகில் பட்டினியால் வாடியபடியும், பழைய உடைகளை உடுத்தியபடியும் தவித்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை, உதவும் கரங்களை சேர்ந்த சமூக சேவகர் ஜேக்கப் கண்டுபிடித்தார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மோதியதில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதும் தெரிந்தது. அவரை மீட்டு, திருவேற்காட்டில் உள்ள சாந்திவனத்துக்கு அழைத்துச்சென்று உணவு மற்றும் புதிய ஆடைகள் வழங்கப்பட்டன. பின்னர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர் பரிசோதித்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவருக்கு ரூ.1.6 லட்சத்தில் காலில் பிளேட் பொறுத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மனநல டாக்டர் மூலம் மனசோர்வுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் சிறிது நலமடைந்ததும் அவரிடம் உதவும் கரங்களை சேர்ந்த சமூக சேவகர் சீனிவாச ராவ் விசாரித்தார்.

அப்போது, அவர் தன்னுடைய பெயர் பாண்டியன் என்றும், சிவகங்கை மாவட்டம் பரமக்குடி தாலுக்கா இளையங்குடியைச் சேர்ந்தவர் என்றும், பெற்றோர், உடன் பிறந்தவர்கள் அங்கிருப்பதாகவும், 21 ஆண்டுகளுக்கு முன்பு தான் வீட்டைவிட்டு வெளியேறி வந்துவிட்டதாகவும் கூறினார். உடனடியாக உதவும் கரங்களைச் சேர்ந்தவர்கள் அவருடைய பெற்றோருக்கு தகவல் அளித்து நேரில் வரவழைத்து அவர்களிடம் பாண்டியனை ஒப்படைத்தனர். 21 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற தங்கள் மகனை தேடி கண்டுபிடித்து தந்ததற்கு உதவும் கரங்கள் அமைப்புக்கு அவரது பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com