உத்தவ் தாக்கரேயை போல எதிர்க்கட்சியை மிரட்டும் முதல்-மந்திரியை பார்த்தது இல்லை - தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

உத்தவ் தாக்கரேயை போல எதிர்க்கட்சியை மிரட்டும் முதல்-மந்திரியை நான் பார்த்தது இல்லை என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
உத்தவ் தாக்கரேயை போல எதிர்க்கட்சியை மிரட்டும் முதல்-மந்திரியை பார்த்தது இல்லை - தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி
Published on

மும்பை,

மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று விவசாயிகள் மற்றும் மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் ஆளும்கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். இதுகுறித்து அவர் மும்பையில் பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தாக்கரே அரசாங்கம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதில் தோல்வி அடைந்துவிட்டது. அவர்களின் கோரிக்கைகளை அரசு முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. பருத்தி, சோயாபீன் பயிர்கள் பூச்சிகளால் அழிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கு நிவாரணமும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்திலும் அரசு முழுமையாக தோல்வி அடைந்து உள்ளது. மந்திரிகள் அரசின் தோல்விகளை மறைத்து பேசி வருகின்றனர்.

மராட்டியத்தில் உத்தவ் தாக்கரேயை போல எதிர்க்கட்சியை மிரட்டும் எந்த முதல்-மந்திரியையும் நான் பார்த்தது இல்லை. சமீபத்தில் மும்பை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகள் மாநிலத்தின் சட்டமீறல்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை கங்கனா ரணாவத் பங்களா வீட்டின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி இடித்த சம்பவத்திலும், அர்னாப் கோஸ்வாமி கைது நடவடிக்கையிலும் மாநில அரசுக்கு எதிராக சமீபத்தில் மும்பை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com