மரக்காணம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 1,071 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

மரக்காணம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1,071 பேருக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மரக்காணம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 1,071 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
Published on

பிரம்மதேசம்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மரக்காணம் பஸ் நிலையம் அருகே நடந்தது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் தலைமை தாங்கினார். விழாவுக்கு வந்த அனைவரையும் நகர செயலாளர் கணேசன் வரவேற்றார். முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாண்டுரங்கன், மரக்காணம் கூட்டுறவு சங்க தலைவர் கனகராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜியா அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, 1,071 பேருக்கு வேட்டி, சேலை, பாத்திம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்கினார்.

விழாவில் மாவட்ட மீனவரணி நிர்வாகி ஜெயராமன், கீழ்எடையாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஆதிபகவான் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com