

உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மாங்கால் கூட்ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மணிகண்டன். இவர் மானம்பதி ஆஸ்பத்திரிக்கு எதிரே வாயில் நுரைதள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பெருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் மணிகண்டன் திருமணம் ஆகாத ஏக்கத்தில் விஷம் குடித்தது தெரியவந்தது. இதுகுறித்து பெருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இறந்து போன மணிகண்டனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா உக்கல் கிராமம் ஆகும்.