துணை ராணுவத்தில் மருத்துவ அதிகாரி பணிகள்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று சசாஸ்திரா சீமா பல் (எஸ்.எஸ்.பி.). புதுடெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது.
துணை ராணுவத்தில் மருத்துவ அதிகாரி பணிகள்
Published on

சசாஸ்திரா சீமா பல் படைப்பிரிவில் தற்போது மருத்துவ அதிகாரி (ஜெனரல் டியூட்டி) மற்றும் சிறப்பு மருத்துவர் பணிக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நேரடி நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை காண்டிராக்டு அடிப்படையிலான பணியாகும். மொத்தம் 91 பேர் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மருத்துவ அதிகாரி பணிக்கு 74 இடங்களும், ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு 17 இடங்களும் உள்ளன.

67 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மருத்துவ பட்டப்படிப்பு, குறிப்பிட்ட மருத்துவ பிரிவுகளில் முதுநிலை மருத்துவ படிப்பு, முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர் களுக்கு வாய்ப்பு உள்ளது.

நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் தேவையான சான்றுகளுடன் இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். பிப்ரவரி 5 மற்றும் 6-ந் தேதிகளில் இதற்கான நேர்காணல் நடைபெற உள்ளது. இது பற்றிய விவரங்களை www.ssb.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com