கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம்

பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, தொகுதி பொறுப்பாளர் ஜெயசீலன் ஆகியோர் பேசுகையில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பெரம்பலூரில் வருகிற 9-ந் தேதி மாலையில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். எனவே அந்த கூட்டத்தில் கட்சியினர் திரளானோர் பங்கேற்க வேண்டும். வருகிற 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் பாரிவேந்தரை ஆதரித்து ஆட்டோ ஊர்வல பிரசாரமும், 10-ந் தேதி பெரம்பலூர், ஆலத்தூர் தாலுகாவிலும், 11-ந் தேதி வேப்பந்தட்டை தாலுகாவிலும் கட்சியின் கலைக்குழு சார்பில் பிரசாரமும் நடைபெறும். 12-ந் தேதி முதல் கிளை வாரியாக வீடு, வீடாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றனர். இதில் பெரம்பலூர்- ஆலத்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்ட செயலாளர் ராஜாங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகஸ்டின், கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com