கிளாம்பாக்கத்தில், இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் பங்கேற்பு

கிளாம்பாக்கத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கின்றனர்.
கிளாம்பாக்கத்தில், இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் பங்கேற்பு
Published on

காஞ்சீபுரம்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலுரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

கட்டிடம் திறப்பு

முன்னதாக காஞ்சீபுரம் வரும் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாலாஜாபாத் மற்றும் காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைக்கின்றனர். மேலும் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ. 1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நில அளவீட்டு அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கின்றனர்.

காஞ்சீபுரம் வருகை தரும் முதல்அமைச்சர் மற்றும் துணை முதல்அமைச்சர் ஆகியோரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், காஞ்சீ பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானோர் வரவேற்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com