

சீர்காழி,
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சீர்காழியில் நாகை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் வீரமணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெயசந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். அணி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராமு வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோருக்கு கூடுதலாக நிவராணம் வழங்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும். மீத்தேன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் எண்ணெய் கிணறுகளை அமைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் தர்மன், துரை ஜவகர், கலியபெருமாள், ஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.