கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் திருநங்கைகள் உள்பட 1,178 பேருக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் வழங்கினார்

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் திருநங்கைகள் உள்பட 1,178 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் திருநங்கைகள் உள்பட 1,178 பேருக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் வழங்கினார்
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்திலியில் திருநங்கைகள் வசிக்கின்றனர். ஊரடங்கால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இந்திலியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பிரபு எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மோகன், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரான அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்

இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு 41 திருநங்கைகளுக்கு நிவாரணமாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இதில் மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பொற்கொடி, அ.தி.மு.க. நகர செயலாளர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம்

இதேப்போல் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த ஊர் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த ஊரில் உள்ள 1,137 நபர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கிரண்குராலா, சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு, முன்னாள் அமைச்சர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் அரசு, துணைத்தலைவர் சன்னியாசி, கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், தாசில்தார் நடராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, நாராயணசாமி, வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாராயணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜேந்திரன், பாண்டியன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com