சிறுபான்மை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய சிறுபான்மையினர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறுபான்மை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

மலைக்கோட்டை,

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய சிறுபான்மையினர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய சிறுபான்மை கழக நிறுவன தலைவர் சதக்கத்துல்லா மவுலானா தலைமை தாங்கினார். முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொது செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் முஸ்லிம் மக்கள் கழக நிறுவன தலைவர் ஜைனுதீன், மக்கள் தேசம் கட்சி தலைவர் பாக்கியராஜ், லட்சிய திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கருப்பையா உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. வரி நிலுவைத் தொகை, வாட் வரி நிலுவை தொகை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய தொகை ஆகியவற்றை இதுநாள் வரை வழங்காமல் உள்ள மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com