ஊரடங்கால் பாதிப்பு ஏழை மக்கள் பசியாற 10 ரூபாய்க்கு உணவு உழவர்கரை நகராட்சி ஏற்பாடு

ஊரடங்கால் பாதிப்பு ஏழை மக்கள் பசியாற 10 ரூபாய்க்கு உணவு உழவர்கரை நகராட்சி ஏற்பாடு.
ஊரடங்கால் பாதிப்பு ஏழை மக்கள் பசியாற 10 ரூபாய்க்கு உணவு உழவர்கரை நகராட்சி ஏற்பாடு
Published on

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வெளியூர்வாசிகள், ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு ஆகியவற்றை புதுவை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இந்தநிலையில் உழவர்கரை நகராட்சி மற்றும் நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் சார்பில் 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி, தக்காளி சாதம், சம்பார் சாதம், புளிசாதம், தயிர் சாதம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி, உழவர்கரை நகராட்சி ஜவகர் நகர், கம்பன் கலையரங்கம் ஆகிய இடங்களில் தினமும் உணவு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளை வீட்டில் இருந்து பெறுவதற்கு 7806801159 முதல் 7806801162 வரை உள்ள எண்களை நகராட்சி வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com