

பழனி:
முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில், பழனி பஸ்நிலைய ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்க துணைத் தலைவர் கைசர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பழனி வட்டார பகுதியை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பழனி வட்டார முஸ்லிம் கூட்டமைப்பை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.