‘என் குடும்பம், எனது பொறுப்பு’ திட்டம்; மக்கள் சுயபாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர முக்கிய ஆயுதமாக இருக்கும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு

‘என் குடும்பம், எனது பொறுப்பு’ திட்டம் மக்கள் சுயபாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர முக்கிய ஆயுதமாக இருக்கும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
‘என் குடும்பம், எனது பொறுப்பு’ திட்டம்; மக்கள் சுயபாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர முக்கிய ஆயுதமாக இருக்கும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
Published on

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக என் குடும்பம், எனது பொறுப்பு என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அரசு வீடு, வீடாக சென்று தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க உள்ளது. தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உதவியுடன் அரசு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்தநிலையில் இந்த திட்டம் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று காணொலிகாட்சி மூலம் மும்பை பெருநகர பகுதியில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்ற கவுன்சிலர்கள், உறுப்பினர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

என் குடும்பம், எனது பொறுப்பு பிரசாரம் சுய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து கொள்ள முக்கிய ஆயுதமாக இருக்கும். மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்ப கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பது முக்கியம். அதற்கு நாம் கொரோனா வைரசுடன் வாழ கற்று கொள்ள வேண்டும். நமது வாழ்க்கை முறையை மாற்றி கொள்ள வேண்டும். இதற்கு நாம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே மக்கள் பிரநிதிகளும், நிர்வாகத்தினரும் கடைசி நபரை சென்றடையும் வரை பணியை நிறுத்திவிடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com