காங்கேயம் அருகே கோவை செழியன் நினைவிடத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி

காங்கேயம் அருகே உள்ள கோவை செழியன் நினைவிடத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
காங்கேயம் அருகே கோவை செழியன் நினைவிடத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி
Published on

காங்கேயம்,

கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் நிறுவனரும், பிரபல சினிமா பட தயாரிப்பாளருமான கோவை செழியனின் நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காங்கேயம் அருகே குங்காருபாளையத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன்படி, நேற்று கோவை செழியனின் நினைவிடத்தில் பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அந்த கட்சியின் மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன், துணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஆறுமுகம், வேலுச்சாமி, கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதுபோல் கொ.ம.தே.க. சார்பில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கோவைசெழியன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பேரவையின் தலைவர் தேவராஜ், கட்சியின் இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் அதன் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. தலைமையில் அந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும், நமது கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில் அதன் மாநில பொதுச்செயலாளர் எம்.தங்கவேல் தலைமையில் கட்சி நிர்வாகிகள் எஸ்.சண்முகம், யுவராஜ்குமார், முருகசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com