பூந்தமல்லி அருகே மெக்கானிக் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

பூந்தமல்லி அருகே மெக்கானிக் உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டி தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி அருகே மெக்கானிக் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
Published on

பூந்தமல்லி,

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், பாவேந்தர் நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 25), காட்டுப்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் உள்ள இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் பெருமாளிடம் முகவரி கேட்டுள்ளனர். அப்போது, திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பெருமாளை வெட்டினார்கள். இதனை சற்றும் எதிர்பாராத பெருமாளுக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் ரத்தம் சொட்ட, சொட்ட நிலை குலைந்து போன பெருமாள் கீழே சரிந்தார்.

அங்கு இருந்த பல்லாவரம், பம்மலைச் சேர்ந்த சண்முகம் (47), இதனைக்கண்டதும் ஓடி வந்து தடுக்க முயன்றபோது அவரையும் வெட்டி விட்டு, அந்த கும்பல் ஒரு மோட்டார்சைக்கிளை விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து, அருகிலிருந்த பொதுமக்கள் வெட்டுக்காயங்களுடன் இருந்த பெருமாளை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சண்முகம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் 2 பேரை வெட்டி விட்டு தப்பி ஓடிய நபர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? முன் விரோதம் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை இந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படாததால், தற்போது வெட்டிய நபர்கள் யார்? என்பது தெரியவில்லை. அவ்வாறு வைத்திருந்தால், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது தெரிந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே, இனியும் தாமதப்படுத்தாமல் கண்காணிப்பு கேமராக்களை வைக்கும் பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com