ஸ்ரீபெரும்புதூர் அருகே படுகாயங்களுடன் பெண் பிணம் மீட்பு அடித்து கொலையா? போலீஸ் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் படுகாயங்களுடன் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே படுகாயங்களுடன் பெண் பிணம் மீட்பு அடித்து கொலையா? போலீஸ் விசாரணை
Published on

வாலாஜாபாத்,

ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேவளூர் குப்பம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி மேவளூர் குப்பம் கிராம நிர்வாக அலுவலர் மோகன் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணா, ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் அஜய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பெண்ணை மர்மநபர்கள் அடித்து கொலை செய்து இங்கு வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com