நெமிலி கிழக்கு ஒன்றியத்தில் காந்தி எம்.எல்.ஏ. முன்னிலையில் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

300-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
நெமிலி கிழக்கு ஒன்றியத்தில் காந்தி எம்.எல்.ஏ. முன்னிலையில் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
Published on

நெமிலி,

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றியம் புதுக்கண்டிகை, பின்னாவரம், சேந்தமங்கலம், பள்ளூர், ஆட்டுப்பாக்கம், சித்தூர், ஆலப்பாக்கம், பருக்கூர் மற்றும் சயனாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மோகன்ராஜ், ஜெகன், பார்த்திபன், அன்பரசன், மணி, பெருமாள், நாகராஜ் மற்றும் பிரகாஷ் உள்பட 300-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெ.வடிவேலு செய்திருந்தார்.

இதில் மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர்கள் பவானிவடிவேலு, கே.சிட்டிபாபு, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் ஏ.ஜானகிராமன், பாபு, சண்முகம், ராமலிங்கம், பேரூர் செயலாளர்கள் நெமிலி நி.ஜனார்த்தனன், பனப்பாக்கம் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பெருமாள், அப்துல்ரகுமான், மாவட்ட தொண்டரணி எம்.கே.சிவா, நிலவுபாபு, அரக்கோணம் நகர துணை செயலாளர் ஏ.அன்புலாரன்ஸ், நகர இளைஞரணி எஸ்.பிரசாத் அலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com