ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3¼ லட்சம் ‘அபேஸ்’ - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3¼ லட்சம் அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3¼ லட்சம் ‘அபேஸ்’ - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

நெல்லை,

பாளையங்கோட்டை உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 70). இவர் நெடுஞ்சாலைத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய வங்கி ஏ.டி.எம். கார்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொலைந்து விட்டது. அந்த ஏ.டி.எம். கார்டின் பின்புறம் அவர் ரகசிய நம்பரை எழுதி வைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கரநாராயணன் வங்கியில் பணம் எடுக்க சென்றார். அப்போது அவருடைய வங்கி கணக்கில் இருந்து ஏற்கனவே ரூ.3 லட்சம் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்மநபர், தொலைந்து போன அவருடைய ஏ.டி.எம். கார்டை எடுத்து அதன்மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பணம் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த ஏ.டி.எம். மையங்களில், எந்த நேரத்தில் எடுக்கப்பட்டு உள்ளது என்ற விவரத்தை சேகரித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மர்மநபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com