கயத்தாறில் அதிகாரிகள் சோதனை : கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கயத்தாறில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கயத்தாறில் அதிகாரிகள் சோதனை : கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
Published on

கயத்தாறு,

கயத்தாறு நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் அழகர், உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன், சுகாதார மேற்பார்வையாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், ராஜேந்திரன், அமல்ராஜ், நவநீத கண்ணன், செல்வரங்கன், பாபு உள்ளிட்ட குழுவினர் நேற்று அங்குள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கடைகளில் இருந்த ரூ.22 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான உணவுப்பொருட்கள் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடைக்காரர்களுக்கு மொத்தம் ரூ.7,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கயத்தாறு-கடம்பூர் ரோட்டில் உள்ள மளிகை கடையில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டாரை பொருத்தி, முறைகேடாக குடிநீரை உறிஞ்சியது தெரிய வந்தது. எனவே அந்த மின் மோட்டாரை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குடிநீர் இணைப்பை நிரந்தரமாக துண்டித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com