வீரப்ப கவுண்டனூர் சோதனை சாவடியில் அதிகாரிகள் திடீர் சோதனை

கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்ப கவுண்டனூர் சோதனை சாவடியில் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
வீரப்ப கவுண்டனூர் சோதனை சாவடியில் அதிகாரிகள் திடீர் சோதனை
Published on

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்ப கவுண்டனூர் சோதனை சாவடியில் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதைத்தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா மேலும் பரவுவதை தடுக்க புதுச்சேரி மாநிலம் தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் கேரள எல்லையில் இருப்பதால், இங்குள்ள சோதனை சாவடிகளில் வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்று உள்ளதா என்று அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணித்து வருகிறார்கள்.

அதிகாரிகள் சோதனை

இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள ரெங்கே கவுண்டனூர், சின்னாகவுண்டனூர் ஆகிய சாலையில் சோதனை சாவடி இல்லாததால் இந்த வழியாக சில வாகனங்கள் இ-பாஸ் இல்லாமல் வருவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றன.

இதையடுத்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் இந்த 2 சாலைகளில் கேரள வாகனங்கள் வருவதை தடுக்க தடுப்புகளை வைத்து அடைத்தனர்.

அத்துடன் இங்குள்ள வீரப்ப கவுண்டனூர் சோதனை சாவடியில் கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் ராமராஜ், கிராம நிர்வாக அதிகாரிகள் மதுகண்ணன், விமல்மாதவன், பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

திருப்பி அனுப்பப்பட்டன

அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்துவந்த வாகனங்களில் இ-பாஸ் இல்லாததால் உடனே அந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டன. அதுபோன்று சில வாகனங்கள் இ-பாஸ் பெற்று இருந்தாலும் அதில் அதிகளவில் ஆட்களை ஏற்றி வந்ததால், அந்த வாகனங்களின் டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.

அதேபோல் சிங்கையன்புதூர் பகுதியில் ஒரு பயணிகள் ஆட்டோ, வேன் ஆகியவற்றில் அதிக ஆட்களை ஏற்றிவந்த வாகனத்திற்க்கும் தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்ததுடன், டிரைவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com