ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை மானபங்கம் செய்து கீழே தள்ளி விட முயற்சி - 2 வாலிபர்கள் கைது

ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை மானபங்கம் செய்து கீழே தள்ளி விட முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை மானபங்கம் செய்து கீழே தள்ளி விட முயற்சி - 2 வாலிபர்கள் கைது
Published on

தானே,

மும்பையின் உயிர்நாடியாக விளங்கும் மின்சார ரெயிலில் அத்தியாவசிய பணியாளர்கள், விலக்கு அளிக்கப்பட்டவர்கள் மற்றும் பெண் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது மின்சார ரெயிலில் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 21 வயது பெண் பயணி ஒருவர் கசரா செல்லும் ரெயிலில் பயணம் செய்தார். அந்த ரெயில் கார்டி-உமர்பாலி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது 2 பேர் பெண்கள் பெட்டியில் ஏறினர். உமர்பாலி நோக்கி ரெயில் சென்ற போது தனியாக இருந்த இளம்பெண்ணை 2 பேர் சேர்ந்து மானபங்கம் செய்தனர்.

இதை கண்டித்த பெண் பயணியை பிடித்து ஓடும் ரெயிலில் கீழே தள்ளி விட முயன்றனர். சுதாரித்து கொண்ட பெண் அவர்களிடம் இருந்து தப்பி உள்ளார். பின்னர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் அவர்கள் முல்லுண்டை சேர்ந்த அமோல் ஜாதவ் (வயது23) , அமன் ஹிலா (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com