ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: வீடுகள், கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கிப்பேட்டை பகுதியில் வீடுகள், கடைகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: வீடுகள், கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
Published on

பரங்கிப்பேட்டை,

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் உள்பட காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்திட மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டம் செயல்வடிவம் பெற்றால் விவசாயம் அடியோடு பாதிக்கப்படுவதுடன், தமிழகம் பாலைவனமாகி விடும் என்று கூறி பொதுமக்கள் மற்றும் அரசியில் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களும் வெடித்து வருகின்றன. அதேபோல் இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களிடையே பல்வேறு அமைப்பினர் விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வரு கின்றனர்.

அந்த வகையில் காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியிலும் இத்திட்டத்தை செயல்படுத்த மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீர் வளம் நிலவளம் பாதிக்கப்படுவதுடன், கடலில் மீன்களின் உற்பத்தியும் பாதிப்புக்கு உள்ளாகும். இவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கும் இந்த திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்பதை வலியிறுத்தும் விதமாக நேற்று பரங்கிப்பேட்டை பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக வர்த்தகர்களும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். எனவே வீடுகள், கடைகள் என்று அனைத்து பகுதிகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதிபரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com