புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 1¼ லட்சம் பேருக்கு 6 மாதத்திற்குள் வீட்டுமனை பட்டா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை-எளிய மக்கள் 1¼ லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா 6 மாதத்திற்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 1¼ லட்சம் பேருக்கு 6 மாதத்திற்குள் வீட்டுமனை பட்டா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
Published on

திருமங்கலம்,

கள்ளிக்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க. மாநில ஜெ.பேரவை சார்பில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விழாவிற்கு தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், அன்பழகன், புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், திருமங்கலம் ஒன்றிய முன்னாள் தலைவர் தமிழழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழா முடிந்த பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் ஏழை-எளிய மக்கள் குடியிருந்தால், அதனை வரன்முறைப்படுத்தி அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. ஏற்கனவே இது நடைமுறையில் இருந்த ஒன்றுதான். அதன்படி அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களை கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு 6 மாதத்திற்குள் இலவச வீட்டுமனைபட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு வேறு எங்கும் சொத்து, வீடுகள் இருக்கக் கூடாது.

நீர் நிலைகளில் வசிக்கும் நகர்ப்புற மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு கட்டித்தரப்படும். அனைவருக்கும் வீடு என்ற நிலையை 2022-ம் ஆண்டிற்குள் எட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com