அறச்சலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

அறச்சலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அறச்சலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
Published on

அறச்சலூர்,

மதுரை பூக்காரத்தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 32). தமிழாசிரியர் திருமணம் ஆனவர். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த அவல்பூந்துறயில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார். இ்ந்தநிலையில் அருணாசலம் அந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் தவறாக பேசியதாக தெரிகிறது. இதையறிந்த பள்ளி நிர்வாகம் அவரை அழைத்து கண்டித்து, வேலையை விட்டு நீக்கியது.

இதைத்தொடர்ந்து அருணாசலம் ஊஞ்சலூர் அருகே உள்ள கருமாண்டம்பாளையத்தில் செயல்படும் ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார்.

இந்தநிலையில் அங்கு பணிபுரிந்துகொண்டே, ஏற்கனவே தவறாக நடந்த அதே மாணவியிடம் செல்போனில் காதல் மொழி பேசியுள்ளார். மேலும் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும் தெரிகிறது. இதையறிந்த மாணவியின் பெற்றோர் இதுபற்றி அறச்சலூர் போலீசில் புகார் அளித்தார்கள்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அருணாசலத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்கள். தமிழாசிரியர் ஒருவர் மாணவியிடம் தவறாக நடந்த காரணத்தால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com