பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் கட்டி முடித்து பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத கழிவறை

பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் கட்டி முடித்து பல ஆண்டுகளாகியும் கழிவறை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் கட்டி முடித்து பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத கழிவறை
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகம் கடந்த 2004-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்திற்கு பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 33 ஊராட்சிகள், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த 38 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, பட்டாமாற்றம், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, வாரிசுதாரர் சான்று, நிலப்பட்டா உள்பட பல சான்றிதழ்கள் பெற இந்த அலுவலகத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இது மட்டும் அல்லாமல் ஆதார்கார்டு, ஸ்மார்ட் கார்டு பெறவும், ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் இந்த அலுவலகத்திற்குத்தான் வரவேண்டும். இப்படி வரும் பொதுமக்கள் தங்கள் வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல பல மணி நேரம் இங்கு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இதனால் இந்த அலுவலத்திற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக கடந்த 2013-2014-ம் ஆண்டு மாவட்ட புனரமைப்பு திட்டத்தின் கீழ் கழிவறை, காத்திருப்போர் கூடம், குடிநீர் வசதி ஏற்படுத்த ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் கழிப்பிடம், காத்திருப்போர் கூடம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை முடித்த பின்னர் குடிநீருக்காக குடிநீர் தொட்டியும் ஏற்பாடு செய்தார்.

குடிநீர் ஏற்பாடு செய்யாமல் அத்துடன் தன்னுடைய பணி முடிந்தது என்று விட்டுவிட்டார். கழிவறைக்கு தண்ணீர் இணைப்பு ஏற்பாடு செய்யவில்லை. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தண்ணீர் வசதி இல்லாத கழிவறையை உபயோகப் படுத்தமுடியாமல் அவதிப்படுகின்றனர். அதேபோல் குடிநீர் இணைப்பு இல்லாமல் தொட்டியும் காலியாக உள்ளது.

கழிவறை கட்டி பல ஆண்டுகளான பின்னரும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com