பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் கலெக்டர் ஆய்வு

பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் கலெக்டர் ஆய்வு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் கலெக்டர் ஆய்வு
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கொளத்தூர், குமாரராஜூபேட்டை, சானாகுப்பம், வெளியகரம் ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் வளாக பணிகள் நடைபெறுகின்றன.

இந்த பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். திட்ட பணிகளை விரைந்து முடிக்க அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பசுபதி, அருள் (கிராம ஊராட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். அதன்பின்னர் பள்ளிப்பட்டு தாலுகாவை அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாலாபுரம் கிராமத்தில் உள்ள மலைமேல் புதிதாக மரக்கன்றுகள் நட்டு வனப்பகுதி அமைக்கும் இடத்தை அவர் பார்வையிட்டார்.

அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, டேங்க் ஏற்பாடு செய்ய எவ்வளவு செலவாகும் என்பதை அறிக்கை தயார் செய்து அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு அவர் தனது ஆய்வை முடித்துக்கொண்டு திருவள்ளூர் புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com