ஊராட்சி செயலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

ஊராட்சி செயலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி செயலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்கக்கோரி பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் மெல்கிராஜாசிங், வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் சீனிவாசன், கண்ணதாசன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திரளான ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட இணை செயலாளர் ஜார்ஜ், மாவட்ட பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிர்வாகிகள் பூபதி, வலசை ராஜ், சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர் வீரராகவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்கக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில் திரளான ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேஷ்கண்ணா, குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஊராட்சி செயலாளர்கள் நலசங்கத்தின் மாவட்ட தலைவர் முத்து, மீஞ்சூர் ஒன்றிய தலைவர் முருகன், ஊராட்சி செயலாளர்கள் ஹரி, சரளா, தமிழரசன், ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கல்பாக்கம் அடுத்த லத்துர் ஒன்றியத்தில் சீவாடி, லத்தூர், அணைக்கட்டு, கடலூர், பவுஞ்சூர், கொடூர், கூவத்தூர் உள்பட 41 ஊராட்சிகள் உள்ளன. இங்கு பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களும் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டாங்கொளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய ஊராட்சி செயலாளர் சங்க தலைவர் நல்லம்பாக்கம் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் வில்சன் ஜெயகுமார், ராமபக்தன், ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இணை செயலாளர் வி.குணசேகரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ஊராட்சி செயலாளர்கள் வீரராகவன், லீமாரோஸ்லின், பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com