ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பறக்கும் படை தடுக்கவில்லை சீமான் குற்றச்சாட்டு

வீடு வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பறக்கும் படை தடுக்க வில்லை என்று கோவையில் சீமான் பேசினார்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பறக்கும் படை தடுக்கவில்லை சீமான் குற்றச்சாட்டு
Published on

கோவை

வீடு வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பறக்கும் படை தடுக்க வில்லை என்று கோவையில் சீமான் பேசினார்.

வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டு பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் குனியமுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல் தேர்தல்

நாம் தமிழர் கட்சிக்கு இது முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகும். கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 12 சதவீதம் வாக்குகள் பெற்றோம்.

தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். பா.ஜனதாவினர் தன் வீட்டுக்கு தானே குண்டு வைத்து விட்டு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆட்சிக்கு வரும் முன்பு பொதுமக்களிடம் தி.மு.க. வாங்கிய மனுக்கள் எங்கே?. வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்பட வேண்டாம். தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுங் கள். யார் மிரட்டலுக்கும் அச்சப்பட வேண்டாம். அயராது களத்தில் நின்று போராடினால் உறுதியாக வெல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பறக்கும் படை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தேர்தல் எப்போதும் நியாயமான முறையில் நடந்ததில்லை. கேரளாவில் ஓரளவிற்கு முறையான தேர்தல் நடத்தப்படுகிறது. சாலையில் செல்பவர்களிடம் பணத்தை பறிக்கும் பறக்கும் படை, வீட்டுக்கு வீடு ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தவில்லை.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை விதிப்பவர்கள், இந்து என்றால் எல்லாரும் பூணூல் அணிய வேண்டுமே. அணிகிறார்களா?, சீக்கியர்கள் தர்ப்பன் அணியாமல் ராணுவத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசால் சொல்ல முடியுமா? அனைத்து மாவட்டங்க ளிலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com