ஊரடங்கு கண்காணிப்பு பணிகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

பழனி பகுதியில் ஊரடங்கு கண்காணிப்பு பணிகள் குறித்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.
ஊரடங்கு கண்காணிப்பு பணிகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
Published on

பழனி:

தமிழகத்தில் கொரேனா பரவலை தடுக்க தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் பழனி பகுதியில் ஊரடங்கு கண்காணிப்பு பணி குறித்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

பழனி பஸ்நிலைய ரவுண்டானா, குளத்து ரவுண்டானா ஆகிய பகுதிகளில் தேவையில்லாமல் சுற்றி திரிந்த நபர்களை எச்சரித்து அனுப்பினார்.

மேலும் சாலைகளில் பொதுமக்கள் தேவையின்றி வாகனங்களில் சுற்றுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

மருத்துவம் உள்ளிட்ட காரணங்களை தவிர்த்து சாலைகளில் அனாவசியமாக சுற்றித்திரிவோரின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவியுடன் உணவு பொட்டலங்களை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com