2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குன்றத்தூர் ஒன்றியத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி குன்றத்தூர் ஒன்றியத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குன்றத்தூர் ஒன்றியத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
Published on

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 42 ஊராட்சிகளில், 3 மாவட்ட கவுன்சிலர்கள், 21 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதற்காக சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மவுலிவாக்கம், பரணிபுத்தூர், கோவூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி போரூர் உதவி கமிஷனர் பழனி, பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பை நடத்தினார்கள். வாக்குப்பதிவு நேரத்தில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க வாக்குப்பதிவு மையங்களில் ஆங்காங்கே போலீசார் தற்போது இருந்தே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்கு சீட்டுகள் மற்றும் வாக்குப்பெட்டிகள் கொண்டு வந்து சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com