பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நடந்தது.
பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு
Published on

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலபட்டியில் உள்ள ஐந்துநிலை நாடு மூன்றாம் மங்கலம் கண்ணமங்கலத்தில் பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் கடந்த பட்டத்தரசி அம்மனுக்கு கிராமத்தின் சார்பில் பூத்தட்டு எடுத்துவரும் விழா நடைபெற்றது. சுமார் 300 கிலோ எடை கொண்ட பூக்களால் 5 அடி உயரம் கொண்ட பட்டத்தரசி அம்மன் சிலைக்கு பூக்களால் அபிஷகம் செய்யப்பட்டு மலைபோல் பூக்கள் குவித்தன. தொடர்ந்து நேர்த்திக்கடன் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படி சார்பில் சிறப்பு பூஜை மற்றும் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பால் குடம் வைத்து பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து ஊரின் முக்கிய வீதி வழியாக பால் குடத்தை சுமந்து சென்று கோவில் சன்னதியை அடைந்து அங்கு அம்மன் சன்னதி முன்பாக வைக்கப்பட்டு இருந்த மிகப் பெரிய கொப்பரையில் பால் ஊற்றப்பட்டு மின் மோட்டார் மூலம் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் கோயில் முன்பு பிரமாண்ட பந்தலில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குனி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தேவர் திருமகனார் அறக்கட்டளை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று சனிக் கிழமை தேதி காப்பு இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஐந்து நிலை நாடு மூன்றாவது மங்கலம் கண்ண மங்கலம் கிராமத்தார்கள் மற்றும் கோசில் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com