திருச்சி மேற்கு தொகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை - தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு வாக்குறுதி

திருச்சி மேற்கு தொகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
திருச்சி மேற்கு தொகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை - தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு வாக்குறுதி
Published on

திருச்சி,

தி.மு.க. முதன்மை செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு மேற்கு தொகுதியில் விடுபட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசும் போது,

மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றால் குடும்ப தலைவிக்கு ரூ.1000, முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகை ஆயிரத்தில் இருந்து ரூ.1,500-ஆக உயர்த்தப்படும். தற்போது உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மானியம் தரப் படும். மாணவர்களின் கல்வி கடன் ரத்து, கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் இந்த நலத்திட்டங்கள் அனைத்தும் முன்னுரிமை கொடுத்து உங்களுக்கு பெற்றுத்தர உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருச்சி மேற்கு தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரி மை கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பிரசாரத் தில் மத்திய மாவட்ட பொறுப் பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்ப ழகன், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில்பெரியசாமி, பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், மோகன் தாஸ், இளங்கா, தொழில் அதிபர் ஜான்சன் குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவஹர், கம்யூனிஸ்ட் சிறு பான்மை மாநில துணைத் தலைவர் முகமதுமுகையத் தீன், ம.தி.மு.க. மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட் டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com