வேலூரில் தகுதிச்சான்று புதுப்பிக்காத 23 ஆட்டோக்கள் பறிமுதல்

வேலூரில் தகுதிச்சான்று புதுப்பிக்காத 23 ஆட்டோக்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வேலூரில் தகுதிச்சான்று புதுப்பிக்காத 23 ஆட்டோக்கள் பறிமுதல்
Published on

வேலூர்,

வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜசேகரன், ஞானவேல் ஆகியோர் நேற்றுமுன்தினம் காலை வேலூர் பழைய பஸ் நிலையம், வேலூர்ஆற்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி ஓட்டுனர் உரிமம் உள்ளதா? இன்சூரன்ஸ் உள்ளதா? தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டு உள்ளதா? எனச் சோதனைச் செய்தனர்.

இந்த ஆய்வின்போது 4 சரக்கு ஆட்டோ, 19 பயணிகள் ஆட்டோ என 23 ஆட்டோக்கள் தகுதிச்சான்றை புதுப்பிக்காமல் இயங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மாலை பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகளுக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com