கல்லணைக்கால்வாய் பகுதிகளில் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் நேரில் ஆய்வு

கல்லணைக்கால்வாய் பகுதிகளில் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கல்லணைக்கால்வாய் பகுதிகளில் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் நேரில் ஆய்வு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கல்லணைக்கால்வாய் பகுதிகளில் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒரத்தநாடு ஒன்றியம், கல்யாணஓடை தலைப்பு பகுதியில் தண்ணீர் செல்வதை அவர் பார்வையிட்டார்.

பின்னர், பட்டுக்கோட்டை ஒன்றியம், துவரங்குறிச்சி அய்யனார் ஏரியில் கல்லணைக் கால்வாய் நீர்வரத்தின் மூலம் தண்ணீர் நிரம்பி உள்ளதையும், கீழபழஞ்சூர் அய்யனார் கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதையும், மழவேனிற்காடு சிப்பிமுறிச்சான் ஏரியில் கல்லணைக்கால்வாய் நீர்வரத்தின் மூலம் தண்ணீர் நிரம்பி வருவதையும் அவர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டையை அடுத்த மாளியக்காடு, செல்லிக்குறிச்சி ஏரிக்கு தண்ணீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆய்வின் போது தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கீழ்காவிரி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், பயிற்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகவடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com