புதுக்கோட்டை மாவட்டத்தில் யோகா தின நிகழ்ச்சி

இந்தியன் மருத்துவ ஹோமியோபதி துறையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கும், அரசு மருத்துவமனையில் உள்ள பொதுமக்களுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் யோகா தின நிகழ்ச்சி
Published on

விராலிமலை,

விராலிமலையில் யோகா தினத்தை முன்னிட்டு இந்தியன் மருத்துவ ஹோமியோபதி துறையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கும், அரசு மருத்துவமனையில் உள்ள பொதுமக்களுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு விராலிமலை அரசு தலைமை மருத்துவர் ஜான் விஷ்வநாத் தலைமை தாங்கினார். இயற்கை மருத்துவ பிரிவு ஆலோசகர் ராஜேஷ்வரி முன்னிலை வகித்தார்.

இதேபோல விராலிமலை அரசு மருத்துவமனையில் நடந்த யோகாதின பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, தலைவலி, இடுப்புவலி ஆகிய நோய்களை இயற்கை மருத்துவத்தின் மூலம் எப்படி சரிசெய்வது குறித்து இயற்கை மருத்துவ அலோசகர் ராஜேஸ்வரி விளக்கி பேசினார். பயிற்சியில் மருத்துவர் கிருபா சங்கர், பல்மருத்துவர் பானுபிரியா, சித்த மருத்துவர் சித்ரா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அறந்தாங்கி சிவானி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியும், கோயமுத்தூர் ஈஷா யோகா மையமும் இணைந்து 4-வது ஆண்டாக நடத்திய சர்வதேச யோகா தினம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் குழுமத்தலைவர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். முதல்வர் சரவணன் தியாகராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா செய்வதன் அவசியம் குறித்து செயல் விளக்கத்துடன் செய்து காட்டப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் அரசு மேல் நிலைப் பள்ளியில் யோகா தின நிகழ்ச்சி நடந்தது. இதில் 435 மாணவ, மாணவிகள், 20 ஆசிரியர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். யோகாசன பயிற்சியினை விவேகானந்தர் யோகா கேந்திர பொறுப்பாளர்கள் கற்றுக்கொடுத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி மற்றும் யோகா பயிற்சியாளர் திருப்பதி ஆகியோர் யோகாவின் சிறப்புகள் பற்றி விளக்கி பேசினர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் செய்திருந்தார். முடிவில் ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் யோகா தின நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மருத்துவ அலுவலர் பெரியசாமி தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும், யோகாவின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அப்போது சில எளிமையான யோகாசனங்கள் செய்து காட்டப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு மூலிகை ரசம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர்கள் சதீஷ், சர்மிளா, பிரதீபா, சமீம், மற்றும் செவிலியர்கள் உள்பட மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com