

தஞ்சாவூர்,
தஞ்சை கணபதி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து மருத்துவகல்லூரி பகுதி, கணபதி நகர் உள்ளிட்ட இடங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள பழைய குழாய்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் 3 நாட்கள் தண்ணீர் வராது என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.