மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு நிவாரண உதவி பொருட்கள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு புதுச்சேரி அரசின் சார்பில் நிவாரண உதவி பொருட்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு நிவாரண உதவி பொருட்கள்
Published on

புதுச்சேரி,

கேரள மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவிட புதுவை அரசு சார்பில் நிவாரண உதவி பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதற்காக தொழில் அதிபர்கள், வர்த்தகர் சங்கங் கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

இந்த நிவாரண பொருட் களுடன் அரசு சார்பு நிறுவனமான பாசிக் நிறுவனத்துக்கு சொந்தமான மினி லாரி நேற்று கேரளாவுக்கு புறப்பட்டு சென்றது. புதுவை சட்டமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து அந்த மினி லாரியை அனுப்பிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜய், துணை கலெக்டர் தில்லைவேலு மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரள மாநிலத்துக்கு மழை நிவாரண உதவியாக அரசு ஊழியர், பொதுமக்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் பொருட்கள் வருகிறது. அதில் முதல்கட்டமாக நிவாரண பொருட்களை ஒரு மினி லாரியில் அனுப்பிவைத்துள்ளோம்.

இன்னும் ஒரு வாரத்தில் அரசு ஊழியர்கள் வழங்கும் ஒருநாள் சம்பளம் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து வந்த நிதிஉதவியை கேரள அரசிடம் வழங்க உள்ளோம். ரூ.10 கோடி அளவுக்கு கேரளாவுக்கு உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com