

கடலூர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் யார்? என்று ரஜினிகாந்த் கேள்வி எழுப்புகிறார். தமிழ்நாட்டில் நடக்கிற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து தெரியாதவராக இருக்கிறாரா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறாரா? திரையில் சினிமா இயக்குனர்கள் கொடுக்கிற வசனங்களை பேசி நடிக்கின்ற வெறும் நடிகனாக மட்டும் தான் ரஜினிகாந்த் வாழ்ந்து வருகிறாரா? என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இதுபோன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி தெரியாமல், தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்?.
7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ரஜினிகாந்த் தனது நிலையை தெளிவு படுத்த வேண்டும்.