கோவில் கட்ட ரூ.1.11 லட்சம் நன்கொடை ராமர் தேசிய அடையாளமாக விளங்குகிறார் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேச்சு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் அளித்த கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, ராமர் தேசிய அடையாளமாக விளங்குகிறார் என பேசினார்.
கோவில் கட்ட ரூ.1.11 லட்சம் நன்கொடை ராமர் தேசிய அடையாளமாக விளங்குகிறார் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேச்சு
Published on

மும்பை,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்தது. இதில் பிரதமர் மோடி மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 2025-க்குள் ராமா கோவில் கட்டும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது கோவில் கட்டுவதற்கான நிதியை சேகரிக்கும் பணியில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியை நேற்று முன்தினம் நாக்பூரில் மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தொடங்கி வைத்தார். அப்போது அவர் ராமர் கோவில் கட்ட ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார்.

மேலும் அவர் பேசுகையில், " அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதால் நாம் அதிர்ஷ்டசாலிகள். ராமர், ராமர் மட்டும் அல்ல. நமக்கு எல்லாம் தேசிய அடையாளமாக இருப்பவர். அவர் தேசிய கடவுள். ராம ராஜ்யத்தை அமைப்பதில் நாம் சரியான பாதையில் செல்கிறோம். நாடும் சரியான பாதையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. நாம் எதையும் நாட்டிடம் கேட்க கூடாது. நாம் நாட்டிற்கு கொடுப்பதை பற்றி யோசிக்க வேண்டும். நாம் அதே உணர்வுடன் இருந்தால், ராம ராஜ்யத்திற்கு வெகு தூரம் இல்லை என நான் உணாகிறேன் " என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com