

செங்குன்றம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு லாரியில் 18 டன் ரேஷன் அரிசி கடத்தியதாக புதுச்சேரி பாகூர் தாலுகா ஏரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுந்தரம் குமார்(41) என்பவரை திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருந்ததையடுத்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட கலெக்டருக்கு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதைதொடர்ந்து சுந்தர குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.