பழவனக்குடி வாய்க்காலை தூர்வார வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

பழவனக்குடி வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று திருவாரூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. .
பழவனக்குடி வாய்க்காலை தூர்வார வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
Published on

திருவாரூர்,

திருவாரூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் கூட்டம் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் பாவாடையராயன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன், பொருளாளர் சித்ராகுருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணைத்தலைவர் ராஜசேகரன், துணை செயலாளர்கள் நெல்சன் மண்டேலா, செந்தில்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஜெயலெட்சுமி கலைக்கோவன், இளவரசன், கணேசமூர்த்தி, காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போதிய நிதி ஒதுக்கீடு

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக ஊராட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். அனைத்து ஊராட்சிகளுக்கும் எலட்ரானிக் 3 சக்கர குப்பை வண்டி வழங்கிட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார்கள் பழுதடைந்துள்ளதால் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் புதிய மோட்டார்களை வழங்கிட வேண்டும்.

தூர்வார வேண்டும்

700 ஏக்கர் பாசன வசதி பெறும் பழவனக்குடி வாய்க்கால் திருவாரூர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பாலும், சாக்கடை கழிவு நீராலும் உரிய பாசன வசதி பெற முடியாத நிலை உள்ளது. எனவே பழவனக்குடி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com