ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கேவலப்படுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது போலீஸ் நிலையத்தில் புகார்

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கேவலப்படுத்திய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கேவலப்படுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது போலீஸ் நிலையத்தில் புகார்
Published on

ராயபுரம்,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டதாகவும், இது திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற கேவலமானது என்றும் நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து இருந்தார்.

இந்த நிலையில் சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த வக்கீல் சிவா ஆருத்ரா என்பவர் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் அவர், வார இதழ் ஒன்றில் என்னுள் மையம் கொண்ட புயல் என்ற தலைப்பில் நடிகர் கமல்ஹாசன் எழுதும் அத்தியாயத்தில் ஓட்டுக்கு பணம் வாங்குவது பிச்சை எடுப்பது போன்றதாகும் என விமர்சனம் செய்து உள்ளார். நானும், ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்தவன் என்ற முறையில், ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கேவலப்படுத்திய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com