ஆர்.கே.நகர் தொகுதியில் வாகன சோதனையில் ரூ.2 லட்சம் சிக்கியது

ஆர்.கே.நகர் தொகுதியில் வாகன சோதனையின் போது, காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பிடிபட்டது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வாகன சோதனையில் ரூ.2 லட்சம் சிக்கியது
Published on

ராயபுரம்,

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க, பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி

வருகின்றனர்.

இந்த நிலையில், வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகில் சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

ரூ.2 லட்சம் சிக்கியது

அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் மடக்கி சோதனையிட்ட போது, அதில் இருந்த கணக்கில் வராத ரூ.2 லட்சம் சிக்கியது.

காரில் வந்த அரக்கோணத்தைச் சேர்ந்த ஜான் உள்ளிட்ட 3 பேரிடம், வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வீடு குத்தகைக்காக அந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் களை விடுவித்த போலீசார், அந்த பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

வாகனங்கள் பறிமுதல்

இதற்கிடையே அனுமதி இல்லாமல் ஆர்.கே.நகரில் சுற்றிய 15 வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவு பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com