பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியின் மாணவ செவிலியர் சங்கம் மற்றும் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து துறையும் இணைந்து கல்லூரி கலையரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. கல்லூரி முதல்வர் என்.கலைக்குரு செல்வி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் கலந்து கொண்டு பேசுகையில், தினமும் சராசரியாக 400 பேர் சாலை விபத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அதிக அளவில் இரு சக்கர வாகன விபத்துக்கள் நடக்கின்றன. தமிழகத்தில் ஏறக்குறைய 7 கோடி மக்கள் தொகைக்கு 3 கோடியை 25 லட்சம் இருசக்கர வாகனம் பயன்பாட்டில் உள்ளன. இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அதிகபட்சமாக 50 கி.மீ., வேகத்தில் தான் இருசக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில்

பயணம் செய்ய வேண்டும். மழை பெய்து கொண்டிருக்கும் நேரத்தில் குடையை பிடித்து கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. கார் மற்றும் விமானத்தில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும். இரவு பயணத்தை தவிர்க்க வேண்டும். அதேபோல் சாலையில் விபத்து நேரிடுவதை பார்த்தால் உடனடியாக 108-க்கு தகவல் கொடுக்க வேண்டும். செல் போனில் பேலன்ஸ் மற்றும் நெட்வொர்க் இல்லை என்றாலும் கூட 108-க்கு தகவல் கொடுக்க முடியும். அவ்வாறு செய்யும் நபருக்கு நல்ல சமாரியன் விருது வழங்கி தலா ரூ.5 ஆயிரம் மத்திய, மாநில அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு பேசினார்.

இறுதியாக சாலை விபத்தை தடுப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி சிறப்பு விருந்தினருக்கு கல்லூரியின் சார்பில் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சிகளை களப்பயிற்சி ஆசிரியர் புஷ்பலதா, இறுதி ஆண்டு மாணவி குணபாலபிருந்தா ஆகியோர் தொகுத்து வழங்கினார். கல்லூரியின் இணை பேராசிரியரும், மாணவ செவிலிய சங்க ஆலோசகருமான சுமதி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com