கூடலூரில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கூடலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கூடலூரில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Published on

கூடலூர்,

கூடலூரில் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி, நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணிக்கு சமூக ஆர்வலர் மோகன் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம், சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்க தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடலூர் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் காசி விசுவநாதன் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணி ஊட்டி ரோடு, பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு வழியாக ஐந்துமுனை சந்திப்பை அடைந்தது.

பின்னர் அங்கிருந்து ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகம் வழியாக கோழிக்கோடு சாலையை வந்தடைந்தது. பேரணியில் தலைக்கவசம் அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானவர்கள் சென்றனர். தொடர்ந்து துப்புக்குட்டிபேட்டை, செம்பாலா, நந்தட்டி, கோழிப்பாலம் வழியாக அரசு கலைக்கல்லூரியை பேரணி அடைந்தது.

பேரணியில் கல்லூரி கண்காணிப்பாளர் ஜார்ஜ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவசங்கர், போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சத்தியன் உள்பட போலீசார், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்போம். விபத்துகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com