போலி நிறுவனங்கள் மூலம் ரூ.350 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி; 7 பேர் கைது

சரக்கு மற்றும் சேவை வரியில்(ஜி.எஸ்.டி.) மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட வரி ஆலோசகர் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் ஒன்றை சென்னை வெளிப்புற மத்திய ஜி.எஸ்.டி. ஆணையரகத்தின் அமலாக்கம் மற்றும் இணக்க மேலாண்மை பிரிவு கைது செய்துள்ளது.
போலி நிறுவனங்கள் மூலம் ரூ.350 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி; 7 பேர் கைது
Published on

24 போலி நிறுவனங்களின் வாயிலாக போலி ரசீதுகள் மூலம் ரூ.299 கோடியும், இதர நிறுவனங்களுக்கு சட்டவிரோத உள்ளீட்டு வரி கடனை வழங்கியதன் மூலம் ரூ.53.35 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியோடு நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் மூளையாக செயல்பட்டவர் உள்பட ஒட்டுமொத்த கும்பலையும் முதல் முறையாக, அமலாக்கம் மற்றும் இணக்க மேலாண்மை பிரிவு கைது செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், மோசடியின் மதிப்பு இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இந்த கும்பல் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பு, 7 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்கண்ட தகவல் சென்னை வெளிப்புற மத்திய ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் பி.ஜெயபாலசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com